29.5 C
Colombo
Friday, August 21, 2026

கொட்டும் மழையிலும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் போராட்டம்

கொட்டும் மழையிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் யாழ்ப்பாணம் கோயில் வீதியில் உள்ள ஐ.நா அலுவலக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் இப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது பிள்ளைகளை உலக நாடுகள் மீட்டுத்தர வேண்டும், இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், இந்த அரசாங்கத்தில் நம்பிக்கையில்லை சர்வதேசமே நமக்கு தீர்வை கொடு போன்ற கோஷங்கள் எழுப்பியவாறு கொட்டும் மழையிலும் குடை பிடித்தவாறு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles