28.9 C
Colombo
Friday, August 21, 2026

எமக்கும் கொரோனா தடுப்பூசியை ஏற்றவேண்டும் – தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் கோரிக்கை.

சகல தனியார் பஸ் சேவையாளர்களுக்கும் இவ்வாரத்துக்குள் கொரோனா தொற்றை தடுப்பதற்கான தடுப்பூசியை ஏற்றவேண்டும். அவ்வாறு செய்யாவிடின், பஸ்சேவைகளில் இருந்து விலகிக்கொள்வதற்கு ஒன்றிணைந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதென தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

எதிர்வரும் 17ஆம் திகதி வரையிலும் அரசாங்கத்துக்கு காலக்கெடு விதித்துள்ளோமெனத் தெரிவித்த கெமுனு விஜேரத்ன, அதற்கிடையில் சகல தனியார் பஸ்களின் சேவையாளர்களுக்கும் தடுப்பூசியை ஏற்றுவதற்கான வழிவகைகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்றும் கூறினார்.

தனியார் பஸ் நடத்துனர்கள் மற்றும் சாரதிகளில் பலர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்களுடன் நேரடியாக தொடர்புகளை பேணுகின்ற, பொது போக்குவரத்து சேவைகளில் ஈடுபட்டிருக்கும் சகல பஸ்களின் பணியாளர்கள், ரயில்வே உள்ளிட்ட ஏனைய போக்குவரத்து துறைகளைச் சார்ந்தவர்களுக்கும் இந்த தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles