27.8 C
Colombo
Friday, August 21, 2026

நோயாளர் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பு- அத்தியாவசிய சேவைகள் தயார் நிலையில்..!

நாட்டில் கொரோனா நோயாளர்கள் மேலும் அதிகரித்தால் பல பகுதிகளை தனிமைப்படுத்தவேண்டியிருக்கும் நாட்டை ஓரளவு முடக்கவேண்டியிருக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

மட்டுப்படுத்தப்பட்ட பணியாளர்களுடன் தயாராகயிருக்குமாறு அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பசில் ராஜபக்ச தலைமையில் நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நாட்டில் காணப்படும் சுகாதார நெருக்கடி குறித்து தீவிரமாக ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது கொரோனா நோயாளர்கள் காணப்படுகின்றனரென தெரிவித்துள்ள சுகாதார அதிகாரிகள் கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தாவிட்டால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். இது நாட்டின் சுகாதார துறையினரின் கடும் சுமையை செலுத்தலாம் என தெரிவித்துள்ளனர்.

நாட்டில் நேறறு கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை என்றுமில்லாதாவாறு அதிகரித்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles