25 C
Colombo
Thursday, October 8, 2026

கர்ப்பிணித் தாய்மார்களை பணிக்கு அழைப்பது தடை.

நாட்டில் கொரோனாத் தொற்று அதிகரித்துள்ள பின்னணியில், அரச நிறுவனங்களை குறைந்தளவான ஊழியர்களுடன் நடத்திச் செல்ல அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் பிரதானிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரத்னசிறி தெரிவிக்கின்றார்.

ஊழியர்களை கடமைகளுக்கு அழைக்கும் விதம் தொடர்பான சுற்று நிரூபம் நாளை வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரச நிறுவனங்களில் பணியாற்றும் கர்ப்பிணித் தாய்மார்களை பணிக்கு அழைப்பது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது .

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles