28.9 C
Colombo
Friday, August 21, 2026

மத்தளவில் இருந்து சர்வதேச விமானங்களை மீண்டும் இயக்க நடவடிக்கை.

இலங்கையின் அரசு நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதல் முறையாக மாலைதீவுக்கு வாரத்திற்கு ஒரு விமானத்தை விரைவில் இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தற்போது மத்தள விமான நிலையத்தில் திட்டமிடப்பட்ட செயற்பாடுகளைக் கொண்டிருக்கவில்லையென விமான நிலையங்களின் தலைமை செயல்பாடுகளின் இயக்குனர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்தார்.

மத்தளவை அபிவிருத்தி செய்வதற்கான விரிவான திட்டத்தில் இந்த நடவடிக்கை படிப்படியாக வாரத்திற்கு இரண்டு முறை அதிகரிக்கப்படவுள்ளது.

சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்கா, மத்தள விமான நிலையத்தில் இருந்து செயல்படும் சர்வதேச விமான நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்தாரென்பது விசேட அம்சமாகும்.(EconomyNext)

 

 

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles