28.9 C
Colombo
Friday, August 21, 2026

சரவணை பகுதியில் ஆலய சிலையை சேதப்படுத்திய ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் சரவணை பகுதியில் உள்ள ஆலயத்தில் சிலையை உடைத்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

சரவணை செல்லக்கதிர்காமம் ஆலயத்தில் உள்ள உருவச்சிலையே நேற்று சேதப்படுத்தப்பட்டது.

கண்காணிப்பு கமரா காட்சிகளின் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்துறை பொலிஸார் அப்பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர்.

மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் சந்தேக நபரை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles