ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை, கல்வி பொது தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரம் ஆகிய பரீட்சைகளில் தேசிய ரீதியாக முதல் இடங்களை பெற்றவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மாணவர்களின் மனோநிலை தொடர்பில் கருத்திற் கொண்டே தாம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டிலுள்ள மனோநிலை விசேட வைத்தியர்களின் ஆலோசனைகளை பெற்றே இந்த தீர்மானத்தை எட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.
2019ம் ஆண்டு தொடக்கம், பரீட்சைகளில் முதல் இடத்தை பெற்ற மாணவர்களின் விபரங்களை வெளியிடாது இருக்க தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பல்கலைக்கழக பிரவேசத்தை அறிவிப்பதற்காக, பெறுபேறு சீட்டில் மாத்திரம் மாவட்ட மற்றும் தேசிய மட்டத்தில் பெற்றுக்கொண்ட புள்ளி விபரங்களை வெளியிடுவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

