27.8 C
Colombo
Friday, August 21, 2026

சண்டிலிப்பாய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அமளிதுமளி!

கடும் அமளிதுமளிக்கு மத்தியில் சண்டிலிப்பாய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இன்று நடைபெற்று முடிந்தது.

ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ச.சிறீபவானந்தராஜாவின் தலைமையில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் பிரபாகரமூர்த்தி, பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனா ஆகியோரின் பங்கேற்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்டளவில்  மாத்திரம் பிரதேச சபை உறுப்பினர்களை அழைத்து ஏனைய பிரதேச உறுப்பினர்களை அழைக்காததால் அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களையும் அனுமதிக்ககோரி பிரதேச சபை உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட முற்பட்டதால் குழப்ப நிலை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து பிரதேச செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஆகியோர் பிரதேச சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய நிலையில் நிலைமை சுமூகமானது.

கூட்டம் ஆரம்பமான போது வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஜெசீதன் தனக்கு ஒழுங்கான முறையில் ஆசனம் ஒதுக்கப்படவில்லை என தெரிவித்தார். இதனையடுத்து  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஜெசீதனுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டது.

ஆசனம் ஒதுக்கப்பட்டதில் ஆரம்பித்த பிரச்சினை கூட்டத்தில் தொடர்ந்தும் எதிரொலித்தது.

இக்கூட்டத்தில் பேரிடர் பாதிப்புகள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நிவாரண நடவடிக்கைகள் மற்றும் எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்க வேண்டிய மீள்கட்டியெழுப்பல் பணிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

மேலும், மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதிகளின் பயன்பாடு, மத்திய மற்றும் மாகாண திணைக்களங்களின் திட்ட முன்னேற்றங்கள், புதிய திட்ட அனுமதிகள் ஆகியவை தொடர்பாகவும் மதிப்பாய்வு செய்யப்பட்டது.

அதேபோல், கல்லுண்டாய் மக்களின்குடிநீர், வெள்ளம், சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகள், கல்லுண்டாய் குப்பை சேகரிப்பு நிலையத்தில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வாழும் மக்களின் பிரச்சினைகள் குறித்தும் இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.

கூட்டம் முடிவடைந்த பின்னர் வெளியே வந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதனால் அமைதியின்மை ஏற்பட்டது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles