யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அது இடிந்து விழும் நிலையில் மிகவும் ஆபத்தான விதத்தில் காணப்படுகின்றது எனவும் அதனை பேணிப் பாதுகாக்க பல தரப்பும் அழைப்பு விடுத்திருந்த நிலையில் குறித்த முயற்சி சாத்தியமாகவில்லை.
இந்நிலையில் இன்று தீடீரென காற்றுடன் ஏற்பட்ட மழை காரணமாக நல்லூர் மந்திரிமனையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.


