சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு
வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் இருந்து ஆரம்பமான பேரணி செம்மணி பகுதியில் நிறைவடைந்தது.
குறித்த போராட்டத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் சமூக பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் ,
பொது மக்கள் , உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

