செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 187 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 174 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது என சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார்.
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் 37வது நாளாக நேற்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
அகழ்வுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், புதிதாக 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டது. பத்து மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டது.
இதுவரை மொத்தமாக 187 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு இலக்கமிடப்பட்டது.
இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளுடன் மொத்தமாக 174 எலும்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
சான்றுப் பொருளாக உடைந்த காப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது – என்றார்.

