29.5 C
Colombo
Friday, August 21, 2026

செம்மணி மனித புதைகுழியை பார்வையிடவுள்ள ஜனாதிபதி!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பார்வையிடலாம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க யாழப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள நிலையில் செம்மணி மனிதப் புதைக்குழியை பார்வையிட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இதனை தெரிவித்தார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles