28.9 C
Colombo
Friday, August 21, 2026

செம்மணி மனித புதைகுழியில் ஸ்கான் பரிசோதனை செய்வது தொடர்பாக இன்று முடிவு

யாழ்ப்பாணம் செம்மணியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணிகளில் மொத்தமாக 46 சான்றுப்பொருட்கள் அகழப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ் செம்மணி அகழ்வுப்பணிகள் 22 ஆவது நாளாகவும் யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டன.

தொல்பொருள் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவ, தலைமையிலான குழுவினர் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் முன்னிலையில் அகழ்வுப்பணி இடம்பெற்றது.

அகழ்வு பணிகள் தொடர்பாக கருத்து தெரிவித்த சட்டத்தரணிகள்,ஏற்கனவே அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்பு கூடுகளுடன் கடந்த இரண்டு தினங்களில் புதிதாக பதின்நான்கு மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு மொத்தமாக 95 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தது எடுக்கப்பட்டுள்ளது.

11 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இரண்டு மனித புதைகுழிகளிலும் 101 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஸ்கான் பரிசோதனை சம்பந்தமாக பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இதுவரை கிடைக்காததினால் திங்கட்கிழமை எப்போது செய்யப்படும் என்பதை பற்றி அறிவிக்கக் கூடியதாக இருக்கும்.

அகழ்வுப்பணிகளில் மொத்தமாக 46 சான்றுப்பொருட்கள் நீதிமன்றத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் சித்துப்பாத்தி இந்து மயான நிர்வாக அங்கத்தவர்களிடம் விசாரணைகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

சில சில கட்டளைகளை பிறப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரங்களை தாக்கல் செய்திருக்கிறார்கள். அவர்கள் அறிக்கைகள் நீதிமன்ற தாக்கல் செய்யும்போதுதான் புலன்விசாரணை எவ்வாறு செல்கின்றது சம்பந்தமாக கூறக்கூடியதாக இருக்கும் – என்றனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles