தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழி அகழ்வு வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது அடுத்த அகழ்வு பணிகளை 21 ஆம் திகதி ஆரம்பிப்பதாக சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் மன்றுக்கு தெரிவித்தார்.
செம்மணி மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தில் 45 நாட்கள் பணி நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் அகழ்வில் ஈடுபட்டவர்கள் உடல் உள நலன் கருதி கடந்த ஜீலை 10 ம் திகதி தற்காலிகமாக அகழ்வு இடைநிறுத்தப்பட்டிருந்தது.

