29.5 C
Colombo
Friday, August 21, 2026

திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுப்பதற்காக தொடர் விசாரணைகள்

திட்டமிட்ட குற்றச்செயல்களைத் தடுப்பதற்காக தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார, வெகுசன ஊடக அமைச்சர், டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாதாள உலகக் குழுக்களுக்கிடையிலான மோதல்களினாலேயே தொடர்ச்சியான துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் பதிவாகி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல்களுடன் தொடர்புடைய செயற்பாடுகள் இதன் பின்னணியில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இவற்றை முழுமையாக தடுப்பதற்கான நடவடிக்கைள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles