29.5 C
Colombo
Friday, August 21, 2026

செம்மணியில் 33 மனித ஓட்டுத் தொகுதிகள் அடையாளம் – கைப்பையை ஒத்த பொருளும் அடையாளம்

செம்மணி சித்துபாத்தி மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வாய்வு பணியில் இதுவரை 33 மனித ஓட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டது.

அகழ்வாய்வின் துணி, கைப்பையை ஒத்த பொருள் என்பன இனங்காணப்பட்டுள்ளது.

காணொளியை பார்க்க…..

https://www.facebook.com/share/v/19XZB7gjVE/

செம்மணி சித்துபாத்தி மயான மனிதப் புதைகுழி அகழ்வாய்வின் இரண்டாம் கட்ட நிதி ஒதுக்கீட்டுக்கு பின்னர் நான்காம் நாள் அகழ்வாய்வு பணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

யாழ்ப்பாண நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா, தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கொழும்பில் இருந்து அழைத்து வரப்பட்ட குழுவினர் நீதிமன்ற அனுமதிக்கமைய மண் மாதிரிகளை சேகரித்ததுடன் மண் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles