28.9 C
Colombo
Friday, August 21, 2026

காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் பொதிகள் போக்குவரத்து சேவை ஆரம்பம்!

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் – பொதிகள் போக்குவரத்து சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அத்தோடு புகையிரத நிலையத்தில் பயணிகள் ஓய்வு அறையில் நூலகம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது புகையிரத நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டது.

இந்நிகழ்வில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற ளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன், புகையிரத நிலைய அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles