28.9 C
Colombo
Friday, August 21, 2026

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மூவர் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவர் யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு(17) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் படகொன்றும் கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்.மயிலிட்டி மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles