27.8 C
Colombo
Friday, August 21, 2026

2025 உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் காலம் அறிவிப்பு!

2025 உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 17 முதல் மார்ச் 20ம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

போட்டியிட விரும்பும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் இந்தக் காலத்திற்குள் தங்கள் வேட்புமனுக்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் செயல்முறை தொடர்பான மேலதிக விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வார இறுதி நாட்கள் மற்றும் போயா நாள் தவிர்த்து, இன்று (03) முதல் மார்ச் 19 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை 336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் கட்டுப்பணத்தை செலுத்தலாம் என்றும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles