யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருடம் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களிற்கு சீன அரசினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், உள்ளிட்ட சீன தூதரக உயர் அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 1070 குடும்பங்களிற்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.

