28.9 C
Colombo
Friday, August 21, 2026

உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு – புதிய பரீட்சை திகதிகள் அறிவிப்பு

தற்போது நடைபெற்று வரும் 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை மீண்டும் தற்காலிகமாக டிசம்பர் 03 வரை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று (28) முற்பகல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனைத் தெரிவித்தார்.

ஏற்கனவே நவம்பர் 27, 28, 29 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த பாடங்கள் இடைநிறுத்தப்பட்ட நிலையில், நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை தொடர்பான மீளாய்வின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

அதற்கமைய, நவம்பர் 27 முதல் டிசம்பர் 03 வரை நடைபெறவிருந்த பாடங்கள் இடைநிறுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், டிசம்பர் 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஏற்கனவே திட்டமிடப்பட்ட பரீட்சைகள் நேர அட்டவணையின் படி பரீட்சைகள் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்த வகையில், நவம்பர் 27 முதல் டிசம்பர் 03 வரை திட்டமிடப்பட்டுள்ள பாடங்களுக்கான பரீட்சைகள் டிசம்பர் 21 – 31 வரை, ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த நாட்களில் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட குறித்த பரீட்சை அட்டவணை பின்னர் வெளியிடப்படுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles