28.9 C
Colombo
Friday, August 21, 2026

பேருந்தை வழிமறித்து தாக்குதல் – வவுனியாவில் பரபரப்பு

கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை வவுனியாவில் இருவர் வழிமறித்து தாக்குதல் நடத்தினர்.

தாக்குதலில் காயமடைந்த சாரதி பயணிகளுடன் பேருந்தை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். முறைப்பாட்டினை தொடர்ந்து அவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், தனியார் பேருந்து பணியாளர்களே தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் , அவர்களை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles