29.5 C
Colombo
Friday, August 21, 2026

யாழ் மாவட்ட செயலாளருடன் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சந்திப்பு

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான
மருதலிங்கம் பிரதீபனை இன்று (08) மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலில் தற்போதைய வேட்புமனு கையேற்றல் தொடர்பாக வும், எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது தேர்தல்கள் திணைக்கத்தின் பிரதி ஆணையாளார் எஸ். அச்சுதனும் கலந்து கொண்டார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles