28.9 C
Colombo
Friday, August 21, 2026

வேறு ஜனாதிபதிகள் யாரும் பதவியில் இருந்திருந்தால் நான் வந்திருக்க மாட்டேன் – வடக்கு ஆளுநர் வேதநாயகன்

வேறு ஜனாதிபதிகள் யாரும் பதவியில் இருந்திருந்தால் நான் வந்திருக்க மாட்டேன். வேறு யாரும் ஜனாதிபதிகள் என்னை கேட்டிருந்தால் கூட நான் வந்திருக்க மாட்டேன் என புதிதாக வடக்கு மாகாண ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்ற நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று இடம்பெற்ற கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே ஆளுநர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,இன்று வடக்கு மாகாண ஆளுநர் பொறுப்பை ஏற்றுள்ளேன். இதற்காக ஜனாதிபதிக்கு நான் நன்றியை தெரிவிக்கின்றேன்.

மாற்றத்தை உணர்கிறேன். ஊழலற்ற இலஞ்சமற்ற நேர்மையான நாட்டை கொண்டு நடத்துவதற்கு ஜனாதிபதி விரும்புகின்றார். அதனை முன்கொண்டு செல்வோம்.

ஊழலை ஒழித்து மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக பாடுபடுவோம். ஜனாதிபதியின் மூலம் எந்தவித பயமும் இன்றி நாங்கள் வேலை செய்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. எல்லாம் வல்ல இறைவன் மூலம் இந்த ஜனாதிபதி தற்போது வந்துள்ளார். அவருக்கும் நன்றி – என்றார்.

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles