29.5 C
Colombo
Friday, August 21, 2026

சஜித் பிரேமதாசவை ஆதரிக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற்றது.

இதன்போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர். எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அதேநேரம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டிடுவதற்காக பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பா. அரியநேத்திரனை போட்டியில் இருந்து விலகுமாறு கோரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்டவர்கள் இன்றைய மத்திய குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் அரசுக் கட்சியின் தீர்மானம் எதுவும் தனக்கு தெரியாது – கைவிரிக்கும் தலைவர் மாவை

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles