29.5 C
Colombo
Friday, August 21, 2026

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகளுக்கான கடூழிய சிறைத் தண்டனையை விதித்துள்ளது.

2010ம் ஆண்டு பௌசி அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக இருந்த காலப்பகுதியில், வெளிநாடொன்றினால் அமைச்சு அலுவல்களுக்காக வழங்கப்பட்ட வாகனத்தை தனிப்பட்ட வகையில் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில், இன்றையதினம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க இந்த தீர்ப்பை அறிவித்தார்.

அத்துடன் இந்த வழக்கில் அவருக்கு 4 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles