29.5 C
Colombo
Saturday, October 10, 2026

நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம்!

வரலாற்று புகழ்பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்றையதினம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இன்று காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.

ஓகஸ்ட் 18ம் திகதி மஞ்சமும் ஓகஸ்ட் 31ம் திகதி சப்பரமும் செப்டம்பர் 1ம் திகதி தேர்த் திருவிழாவும் செப்டம்பர் 2ம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் மாலை கொடியிறக்கமும் நடைபெறும்.

செப்டம்பர் 3ம் திகதி பூங்காவனமும் செப்டம்பர் 4ம் திகதி வைரவர் உற்சவத்துடனும் மஹோற்சவம் நிறைவுக்கு வரும்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles