ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வுக்கு பின்னர் நாமல் ராஜபக்ஷ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
வர்த்தகர் தம்மிக்க பெரேரா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதுடன் நாமல் ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்க,
சஜித் பிரேமதாசா,அனுர குமார திஸாநாயக்க,விஜேதாச ராஜபக்ஷ,
சரத் பொன்சேகா ஆகியோர் தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் ராஜபக்ஷ குடும்ப வாரிசான நாமல் ராஜபக்ஷவும் களமிறங்கியுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிக்க முன்வந்துள்ள நிலையில் நாமலின் வேட்பாளர் அறிவிப்பு தாக்கத்தை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

