28.9 C
Colombo
Friday, August 21, 2026

என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம் யாழ் போதனா வைத்தியசாலையில் திறந்துவைப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம் சுகாதார அமைச்சர் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

வைத்தியசாலை விடுதிகள், சத்திரசிகிச்சை பிரிவுகளையும் போதனா வைத்தியசாலையின் அரும்பொருட் காட்சியகத்தையும் அமைச்சர் பார்வையிட்டார்.

அத்தோடு குருதி மாற்று சிகிச்சைக்கான உபகரணம் ஒன்றையும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வழங்கி வைத்ததுடன் ஞாபகார்த்தமாக மரக்கன்றையும் நாட்டி வைத்தார்.

https://x.com/JaffnaGallery/status/1813457854239744396?t=o-sE_zuPM7KibLouMfpcrg&s=19

அமைச்சரின் இந்த விஐயத்தின் போது சுகாதார அமைச்சின் செயலாளர் மஹிபால மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன, பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கயன் இராமநாதன், தர்மலிங்கம் சித்தார்தன், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வைத்தியசாலையின் அதிகாரிகள் பணியாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழு யாழ்ப்பாணத்துக்கு இன்று விஐயம் செய்து பல்வேறுபட்ட நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles