29.5 C
Colombo
Friday, August 21, 2026

லொறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் பலி!

பதுளை – சொரணதோட்டை வீதியில் வலிஹிட பிரதேசத்திற்கு அருகில் லொறி ஒன்று கவிழ்ந்ததில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (05) நண்பகல் 12 மணியளவில் பிரதான வீதியில் லொறி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது லொறியில் பயணித்தவர்கள்,வீதி நிர்மாணப் பணிகளில் ஈடுபடச் சென்ற மொனராகலையைச் சேர்ந்த தொழிலாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காயமடைந்த மூவரும் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles