25 C
Colombo
Tuesday, October 13, 2026

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை மாற்றம்!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி 355 ரூபாவாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 344 ரூபாவாகும்.

420 ரூபாவாக காணப்பட்ட ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 41 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 379ரூபாவாகும்.

377 ரூபாவாக காணப்பட்ட லங்கா சுப்பர் டீசலின் லீற்றர் ஒன்றின் விலை 22 ரூபாவால் குறைக்கப்பட்டு 355 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஓட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles