இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று(17)இரவு கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த நான்கு இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடற்படையினர் கைது செய்தனர்.
கைதான மீனவர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதுடன், கைதானவர்களை கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கடந்த ஜீன் 15 ம் திகதி முதல் இந்தியாவில் இரண்டு மாதகால மீன்பிடி தடைக் காலம் முடிவுக்கு வந்து இந்திய மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்து வடபகுதி மீனவர்கள் கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவித்ததுடன் பாராளுமன்றத்திற்கும் இந்திய துணைத் தூதரகத்திற்கு முன்பாகவும் போராட்ட நடத்தப்போவதாக எச்சரித்தனர்.

