யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஏ9 வீதியில் கைதடி- நுணாவில் பகுதியில் டிப்பருடன் மோதுண்டு இளம் குடும்பஸ்தரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் இன்று (12) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
காணொளியை பார்க்க…
https://www.facebook.com/share/v/AaWo8cwwbGMmpZXM/?mibextid=oFDknk
யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்துடன் வீதியில் நடந்து பயணித்த குடும்பஸ்தர் மோதுண்டு உயிரிழந்தள்ளார்.
உயிரிழந்தவர் குருணாகலை சேர்ந்த 34 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

