32.2 C
Colombo
Friday, October 9, 2026

மணல்காட்டில் 31 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை மணல்காட்டில் 31 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த கைது இன்று முன்னெடுக்கப்பட்டது.

மணல்காட்டுப் பகுதியைச் சேர்ந்த 31 வயதானவரே இவ்வாறு பருத்தித்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

சந்தேகநபர் சட்டநடவடிக்கைக்காக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles