மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 6 பல்கலைக்கழக மாணவர்களும் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு மயிலத்தமடு – மாதவணை மேய்ச்சல்த்தரை சிங்கள ஆக்கிரமிப்பிற்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 05ஆம் போராட்டமொன்றினை மேற்கொண்டிருந்தமை தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களே இன்று (03) ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்.
சிறிலங்கா காவல் துறை போதிய சாட்சியங்களை முன்வைக்கத் தவறியமை, குற்றப்பத்திரிகையில் காணப்பட்ட முரண்பாடு, மேலும் குற்றச்சாட்டுக்களை முன்கொண்டு செல்வதற்கான எவ்வித முகாந்தரங்களும் இல்லை என்னும் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட மாணவர்கள் 06 பேரும் ஏறாவூர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்.

