28.9 C
Colombo
Saturday, October 10, 2026

மதுபோதையில் வெயிலில் வீழ்ந்து கிடந்தவர் யாழில் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் மதுபோதையில் வெயிலில் வீழ்ந்து கிடந்தவர் உயிரிழந்துள்ளார்.

புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த எஸ்.ஜெயக்குமார் என்ற 45 வயதானவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்றைய தினம் மதியம் 1 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை வீட்டின் பின்புறம் வெயிலில் தன்னிலை மறந்து மதுபோதையில் கிடந்தாக கூறப்படுகிற நிலையில் உயிரிழந்தார்.

சட்ட மருத்துவ அதிகாரி தனது பரிசோதனையின பின்னர் குறித்த இறப்பு வெயில் வெப்பத்தினால் ஏற்பட்டது என அறிக்கையிட்டுள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles