இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருட்களின் விலை இன்று(30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் திருத்தப்பட்டுள்ளது.
இதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் விலை 3 ரூபாவால் குறைக்கப்பட்டு 368 ரூபாவாக நிர்ணயிக்கப்படுகிறது.
95 ஒக்டேன் பெற்றோல் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 420 ரூபாவாக நிர்ணயிக்கப்படுகிறது.
லங்கா ஒட்டோ டீசல் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டு 333 ரூபாவாக நிர்ணயிக்கப்படுகிறது.
சுப்பர் டீசல் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டு 377 ரூபாவாக நிர்ணயிக்கப்படுகிறது.
மண்ணெண்ணெய் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டு 215 ரூபாவாக நிர்ணயிக்கப்படுகிறது.

