ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
பொலிஸாரும் முப்படையினரும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டார்.
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி (Dr.Ebrahim Raisi) உள்ளிட்ட தூதுக்குழுவினர் சற்று முன்னர் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்திருந்த நிலையில் அவர்களுக்கு, பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் வரவேற்பளிக்கப்பட்டது. ஈரான் ஜனாதிபதியின் ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் திறந்து வைக்கப்படவுள்ளது.
ஈரான் ஜனாதிபதி இப்ரஹிம் ரைசியின் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்துடன் ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாக இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் கூறியுள்ளார்.

