28.9 C
Colombo
Friday, August 21, 2026

BREAKING யாழில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொரோனா தொற்றால் ஒருவர் மரணம்!

யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொரோனோ தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்தார்.

பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆயுள்வேத சிகிச்சைக்காக வந்த 62 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் வட்டுக்கோட்டை அராலியில் தங்கியிருந்த நிலையில் காய்ச்சல் காரணமாக இரண்டு நாள்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில்  சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்பின் பின் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது.

கோவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள்!

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles