இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை திருத்தியுள்ளது.
இதற்கமைய, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, புதிய விலை 440 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 72 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 386 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.
அத்துடன், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.இதன்படி, ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 245 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
அத்துடன், ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை மற்றும் ஒட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

