வவுனியா ஓமந்தையில் விபத்தில் சிக்கி முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வவுனியா ஓமந்தை பகுதியில் இன்று(27) மாலை இடம்பெற்ற விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
டிப்பர் வாகனமும் கப் வாகனமும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இவ் விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது
விபத்து தொடர்பான விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
காணொளியாக பார்க்க….

