24.5 C
Colombo
Thursday, October 8, 2026

மீசாலையில் பேரூந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி விவேகானந்தா நகரை சேர்ந்த சின்னராசா சுதன்ராஜா என்ற 41 வயதானவரே உயிரிழந்துள்ளார்.

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பேருந்து, யாழ் – கண்டி நெடுஞ்சாலையில், மீசாலை வீரசிங்கம் கல்லூரி முன்பாக பாதசாரி கடவையில் பிறிதொரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த மோட்டார் சைக்கிளை மோதி விபத்தினை ஏற்படுத்தியது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பேருந்து சாரதியை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காணொளியாக பார்க்க……

https://www.facebook.com/share/v/CjrGdS2LaZcb3WrR/?mibextid=oFDknk

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles