28.9 C
Colombo
Friday, August 21, 2026

பேருந்தை முந்திய எரிபொருள் தாங்கி தடம்புரண்டு விபத்து!

காணொளியை பார்க்க…..

https://fb.watch/qYI73d6BHh/?mibextid=Nif5oz

யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும்  விபத்துக்குள்ளாகி தடம்புரண்டு சரிந்து விழுந்தன.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில் வீதிப் போக்குவரத்து சில மணிநேரம் முற்றாக பாதிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்ட இ.போ.ச. பேருந்தை முந்தி செல்ல முற்பட்ட எரிபொருள் தாங்கி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகி ஒயில் வீதியில் கொட்டியது.

சாதுரியமாக செயற்பட்ட இ.போ.ச. சாரதி பேருந்தை ஒரமாக நிறுத்திவிட்டார். இதன்போது வீதியில் வந்த டிப்பர் வாகனம் கொட்டியிருந்த ஒயிலில் சறுக்கி விபத்துக்குள்ளானது.

விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

இதனால் சில மணி நேரம் அவ்வீதி வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புகையிரத கடவை அருகில் இருந்த வீதி ஊடாக போக்குவரத்து இடம்பெற்றது.

விபத்து காரணமாக எரிபொருள் தாங்கியில் இருந்த ஒயில் வீதி முழுவதும் கசிந்து காணப்பட்டது.

விபத்துக்குள்ளான வாகனங்களை கனரக வாகனங்கள் மூலம் அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டதுடன் வீதியில் வாகனங்கள் சறுக்காது இருக்க மண் பரப்பப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles