29.5 C
Colombo
Friday, August 21, 2026

சகல வகை புகையிரத இருக்கைகளையும் டிஜிட்டல் முறை மூலம் முன்பதிவு செய்யும் வசதி இன்று முதல் அறிமுகம்!

அனைத்து வகையான புகையிரத இருக்கைகளையும் முழுமையாக டிஜிட்டல் முறை மூலம் முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே திணைக்களம் இன்று (14) மாலை முதல் ஆரம்பிக்கிறது.

இதன்படி, www.seatreservation.railway.gov.lk என்ற இணையத்தளத்தில் அல்லது மொபிடெல், ஹட்ச் மற்றும் ஏயார்டெல் தொலைபேசி வலையமைப்புகள் ஊடாக 365இற்கு அழைப்பதன் மூலமும் 444 என்ற டயலொக் தொலைபேசி வலையமைப்பிற்கு அழைப்பதன் மூலமும், டெலிகொம் தொலைபேசி ஊடாக 1265 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலமும் இந்தச் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், ‘Sri Lanka Railways Reservation’ என்ற தொலைபேசி செயலி ஊடாகவும் இருக்கை முன்பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles