வவுனியா – வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற போது சப்பாத்துக் கால்களுடன் ஆலயத்திற்குள் நுழைந்த பொலிஸார் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.
குறித்த 8 பேரையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் நெடுங்கேணி பொலிஸார் 09ம் திகதி முன்னிலைப்படுத்தினர்.
அதன் போது பொலிஸார் வழக்கு விசாரணைகள் இடம்பெறுவதால் விளக்கமறியலில் வைக்குமாறு கோரியைதை அடுத்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது , மன்றில் 08 பேரும் முற்படுத்தப்பட்டதை அடுத்து இடம்பெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து 08 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
கைதானவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட பலரும் ஆஜராகினர்.

