29.5 C
Colombo
Friday, August 21, 2026

அம்பாறையில் மரதனில் பங்கேற்ற மாணவன் உயிரிழப்பு – மாணவர்கள் வைத்தியசாலை முன் கூடியதால் குழப்பம்

காணொளியாக பார்க்க….

https://fb.watch/qKMRK6sX3m/?mibextid=Nif5oz

அம்பாறை – திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று காலை மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற மாணவன் திடிரென மயக்கமுற்ற நிலையில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யபட்ட நிலையில் அங்கு அம்மாணவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

திருக்கோவிலை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க ஜெயக்குமார் விதுர்ஜன் எனும் மாணவனே உயிரிழந்தவராவார்.

குறித்த மாணவன் உயிரிழந்த சம்பவத்தை அறிந்த பாடசாலை மாணவரகள் பொதுமக்கள் மரணமடைந்த மாணவனுக்கு சிகிச்சை அளிக்க தவறிய திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடி மாணவனின் மரணத்திற்கு வைத்தியர்களின் அலட்சிய நிலை காரணம் என தெரிவித்து நீதி கோரி போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உயிரிழந்த மாணவன் எந்தவொரு சிகிச்சையுமின்றி மூன்று மணித்தியாலயத்தின் பின் மரணம் அடைந்ததாக சுட்டிக்காட்டினர்.

சம்பவ இடத்திற்கு மேலதிக பொலிஸார் ,விசேட அதிரடிப்படையினர் ,வரவழைக்கப்பட்டுள்ளதுடன் திருக்கோவில் ஆதார வைத்தியசாலை அருகில் மரணமடைந்த மாணவனுக்கு நீதி கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles