28.9 C
Colombo
Friday, August 21, 2026

இலங்கை விமானப் படையின் கண்காட்சி யாழில் ஆரம்பம்!

காணொளியாக பார்க்க……

https://fb.watch/qD_aEJt64S/?mibextid=RtaFA8

இலங்கை விமானப் படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்று (06) ஆரம்பமானது.

“நட்பின் சிறகுகள்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் ஆரம்பமாகிய குறித்த கண்காட்சி எதிர்வரும் 10 ஆம் திகதி வரை காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை நடைபெறவுள்ளது.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.

அதிகமான பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிடுவதற்கான வருகை தந்தனர்.

கண்காட்சியில் விமானப் படை வீரர்களின் சாகசங்கள் இடம்பெற்று வருவதுடன், ஆளில்லா விமானங்கள், விமானப்படையின் தளபாடங்கள், உலங்கு வானூர்திகள் என்பன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பாடசாலை மாணவர்கள் இந்த கண்காட்சியை முற்றிலும் இலவசமாக பார்வையிட முடியும் என்பதுடன் ஏனையோர் 100 ரூபா கட்டணம் செலுத்தி இந்த கண்காட்சியை பார்வையிடமுடியும்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles