28.9 C
Colombo
Friday, August 21, 2026

சுழிபுரத்திற்கு வந்த புத்தரால் சலசலப்பு!

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளமையால் அப்பகுதி மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச மரத்தின் கீழ் குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

அப்பகுதி கடற்படையினரால் புத்தர் சிலை வைக்கப்பட்டு இருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கும் நிலையில்,புத்தர் சிலையை அடுத்து விகாரை தோற்றம் பெறலாம் என அச்சப்படுகின்றனர்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஆராய்ந்து , புத்தர் சிலையை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles