29.5 C
Colombo
Friday, August 21, 2026

கட்சியின் உள்ளக முரண்பாடுகளைக் களையுங்கள் – சிறீதரன் எம்.பி.யிடம் இந்திய தூதுவர் வலியுறுத்தல்!!

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை அழைத்து,  இந்தியத் தூதரகத்தில் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டமைக்காக சிறீதரனுக்கு வாழ்த்துரைத்த அவர், கட்சியின் உள்ளக முரண்பாடுகளைக் களைந்து, அடுத்தகட்ட நகர்வுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இச் சந்திப்பில் ஈழத்தமிழர் நலன்சார் விடயங்களில் இந்தியாவின் முறையான வகிபங்கை உறுதிப்படுத்த வேண்டியுள்ளதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles