சர்வதேச ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை பதும் நிசங்க பதிவு செய்தார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இன்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 20 × 4 ஓட்டங்களும் 8×6 ஓட்டங்களும் அடங்கலாக 139 பந்துகளில் 210 ஓட்டங்களை பதும் நிசங்க பெற்றார்.
இந்தியாவுக்கு எதிராக சனத் ஜெயசூர்யாவின் 189 ஓட்டங்களை பெற்றிருந்த சாதனையை முறியடித்து, இலங்கைக்காக ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வீரர் ஒருவர் பெற்ற அதிகபட்ச தனிநபர் ஓட்டமாக இது கருதப்படுகிறது.

